தட்சகா தினேஸ்குமாரின் அடுத்த போர்க்களம் Gangsters : தென்னிந்திய முதல் zero budget திரைப்பட இயக்குனர் D.K இன் அடுத்த திரைப்படம் பற்றிய தகவல்கள்
இயக்குனர் தினேஸ்குமார் இன் அடுத்த திரைப்படம் " Zero budget " இல திரைப்படம் எடுக்க முடியுமா என்று தென்னிந்திய திரையுலகம் சந்தேகப்பட்ட காலத்தில், ஆமாங்க Zero budget இலும் படம் எடுக்கலாம் என்று சாதித்துக் காட்டியவர் தான் இயக்குனர் தினேஸ்குமார். 2008 இல் சினிமாத்துறையில் நுழைந்த இவர் பல வித தோல்விகள் , தடைகளையும் கடந்த கடந்த வருடம் " தட்சகா " எனும் Zero budget திரைப்படத்தை moviewud எனும் OTT தளத்தில் வெளியிட்டுள்ளார். இத் திரைப்படமானது எந்த வித முன்னணி நடிகர்களோ அல்லது தயாரிப்பாளர்களின் உதவி இன்றி முழுக்க முழுக்க சுயமுயற்சியில் எடுக்கப்பட்ட ஓர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் சினிமாத்துறையில் ஆர்வமுள்ள புதுமுக நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்தி இருந்தார். இத் திரைப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் தினேஸ்குமார் நண்பர்களின் உதவியுடன் தனது அடுத்த திரைப்படம் எடுக்க உள்ளார். இயக்குனர் தினேஸ்குமார் இத் திரைப்படத்திலும் பல திறமையான புது முகங்களை அறிமுகம் செய்ய உள்ளார். குறிப்பாக 20 வயதுடைய 2 திறமையான இளைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ...