தட்சகா தினேஸ்குமாரின் அடுத்த போர்க்களம் Gangsters : தென்னிந்திய முதல் zero budget திரைப்பட இயக்குனர் D.K இன் அடுத்த திரைப்படம் பற்றிய தகவல்கள்

 

இயக்குனர் தினேஸ்குமார் இன் அடுத்த திரைப்படம் 


" Zero budget " இல திரைப்படம் எடுக்க முடியுமா என்று தென்னிந்திய திரையுலகம் சந்தேகப்பட்ட காலத்தில்,  ஆமாங்க Zero budget இலும் படம் எடுக்கலாம் என்று சாதித்துக் காட்டியவர் தான் இயக்குனர் தினேஸ்குமார். 2008 இல் சினிமாத்துறையில் நுழைந்த இவர் பல வித தோல்விகள் , தடைகளையும் கடந்த கடந்த வருடம் " தட்சகா " எனும் Zero budget திரைப்படத்தை moviewud எனும் OTT தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இத் திரைப்படமானது எந்த வித முன்னணி நடிகர்களோ அல்லது தயாரிப்பாளர்களின் உதவி இன்றி முழுக்க முழுக்க சுயமுயற்சியில் எடுக்கப்பட்ட ஓர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் சினிமாத்துறையில் ஆர்வமுள்ள புதுமுக நடிகர்கள்,  நடிகைகளை அறிமுகப்படுத்தி இருந்தார். இத் திரைப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் தினேஸ்குமார் நண்பர்களின் உதவியுடன் தனது அடுத்த திரைப்படம் எடுக்க உள்ளார். 

இயக்குனர் தினேஸ்குமார் 

இத் திரைப்படத்திலும் பல திறமையான புது முகங்களை அறிமுகம் செய்ய உள்ளார். குறிப்பாக 20 வயதுடைய 2 திறமையான இளைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு Nivedch CJ இசையமைக்கவுள்ளார். மேலும் Finjith Jeyadhas இந்த திரைப்படத்தின் cinematography செய்யவுள்ளார்.

இதைவிட முக்கியமான விடயம் எதுவென்றால் இது ஒரு கான்ங்ஸ்ரர் கதையமைப்பை கொண்ட திரைப்படம் ஆகும்.  ஜுலை மாதம் இத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது. கன்னியாகுமரி , கொச்சி , சென்னை , கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த திரைப்படம் மிகவும் அட்டசாகமாக அமையப் போகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இயக்குனர் தினேஸ்குமார் தனது ரசிகர்களுக்கு வழங்கிய செய்தி பின்வருமாறு

" வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா தான் கனவு என்று திரிந்த நண்பர்கள் என்னுடைய குழுவில் இணைந்து என்னுடைய சினிமா கனவையும் நிறைவேற்றி கொள்ள உதவினர். முயற்சி செய்தால் முடியாதது என்று ஏதும் இந்த உலகத்தில இல்லை.
எனக்கு என்ற ஒரு இடம் இந்த தமிழ் சினிமாவில் கிடைக்கும் வரை கண்டிப்பக முயற்சி செய்து கொண்டிருப்பன். நான் ஒரு குதிரையை விட வேகமாக என்னுடைய இலக்கை அடைய ஓடிக் கொண்டிப்பேன் ஓயாமல் .

அண்மையில் வெளியான தட்சகா திரைப்படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி. இருப்பினும் OTT தளத்தில் போதியளவு வரைவேற்பை பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தெலுங்கு,  கன்னட மொழி Zero budget , புதுமுக நடிகர்களின் திரைப்படங்களுக்கு அங்கிருக்கும் மக்கள் வழங்கிய ஆதரவை தமிழ் மொழியில் வெளிவரும் இவ்வாறான திரைப்படங்களுக்கு மக்கள் ஆதரவு வழங்கி ஊக்குவிக்கும் மனப்பாங்கு மக்களிடம் காணப்படாதது வருத்தமளிக்கிறது. எனினும் எனது அடுத்த திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை நிச்சயம் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். "

இயக்குனர் தினேஸ்குமார் இன் அடுத்த திரைப்படம் நிச்சயம் ஓர் அற்புதமான படைப்பாக அமையும் என்பதில எவ்வித ஐயமும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இத் திரைப்படம் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் பகிருங்கள். இதைவிட முக்கியமாக இயக்குனர் தினேஸ்குமார் சினிமாத்துறையில் ஆர்வமுள்ள வாய்ப்புக்காக ஏங்கும் கலைஞர்கள் தன்னுடன் சேர்ந்து இத் திரைப்படத்தில் பணியாற்ற விரும்பினால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று அழைப்பினையும் விடுத்துள்ளார். உங்கள் சினிமா கனவை நிறைவேற்ற தான் நிச்சயம் உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளார். 

நீங்களும் சினிமாத்துறையில் ஓர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் எனில் இயக்குனர் தினேஸ்குமார் ஐ பின்வருமாறு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp 6383431900.

Email: dreamersstudiomtm5@gmail.com


Comments

Popular posts from this blog

Monster Hunter ( 2020 ) movie Review and Ranking of all the six dangerous monsters from the movie from best to worst

Raya and the Last Dragon movie Analysis and Review

The Witch part 01 : The Subversion Analysis and Review

Freaky (2020) movie analysis & Ranking the top kills from the movie

Silenced Movie Analysis and Review

Is Wrong Turn : The Foundation ( 2021 ) Reboot is better than Wrong Turn ( 2003 ) original film or not ?

Supernatural Season 15 finale " Carry On " : 5 things fans are happy about Series Finale & 5 things they don't. | 5 ways Supernatural has given the perfect ending & 5 ways it don't

Is really the heist team is struck in an Infinity time loop in Zack Synder's Army of Dead ?

Whether Leah is a suitable pair for Daryl or not in The Walking Dead ?

மாஸ்டர் திரைப்படமும் இது வரை பார்க்காத தளபதி விஜய் இன் வித்தியாசமான கதாபாத்திரமும் : மாஸ்டர் திரைப்படம் பற்றிய ஓர் அலசல்