மாஸ்டர் திரைப்படமும் இது வரை பார்க்காத தளபதி விஜய் இன் வித்தியாசமான கதாபாத்திரமும் : மாஸ்டர் திரைப்படம் பற்றிய ஓர் அலசல்
மாஸ்டர்
Genre : Action, Crime, Thriller
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தியேட்டர்களில் வெளிவந்த திரைப்படம் தான் இந்த மாஸ்டர். இத் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தார்கள். முதலில் இந்த திரைப்படத்தின் கதையை சுருக்கமாகப் பார்ப்போம். பின்பு இந்த திரைப்படத்தின் விஜய் இன் கதாபாத்திரம் மற்றைய விஐய் இன் கதாபாத்திரங்களிலும் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
இனி நாம் இந்த ஆக்கத்தில் பார்க்க போறது மாஸ்டர் திரைப்பட விஜய் இன் JD கதாபாத்திரம் வழமையான விஜய் இன் கதாபாத்திரங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்று.
உண்மையில் சொன்னால் விஜயின் இந்த பாத்திரம் அட நம்ம விஜய் சாரா இது ? என்று ரசிகர்களே கேட்கும் அளவுக்கு வித்தியாசமான ஓர் கதாபாத்திரம் ஆகும்.
சண்டைக் காட்சிகளில் சாதாரணமாக அடி வாங்குவது, சண்டையின் போது களைப்படைந்து மூச்சு வாங்குவது என்று ஓர் வித்தியாசமான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். இது விஜயின் மற்றைய படங்களில் இருந்து வேறு பட்டதுடன் உயிரோட்டம் மிக்கதாகவும் ரசிக்கும் படியாகவும் அமைந்துள்ளது. இதை விட மற்றைய கதாபாத்திரங்களுடன் ஓர் ஹீரோ போல் மாஸ் ஆ இல்லாமல் தானும் கலாய்ப்பது மேலும் தான் அவர்களிடம் மொக்கை வாங்குவது என்று ஓர் வித்தியாசமான பாத்திரத்தை தந்துள்ளார்.
மேலும் விஜய் மற்றயவர்களிடம் தன் காதல் கதை என்று டைட்டானிக், பிரேமம் போன்ற திரைப்பட கதைகளை சொல்வது பிரமாதம். குறிப்பாக இறுதியில் சொல்லும் டைட்டானிக் கதைக் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. இதை விட இயக்குனர் தேவையில்லாத காதல் கதையில் அதிக நேரம் செலவிடாமல் ஒரு சிறிய கதையுடன் நகரும் பாடலில் மட்டும் தந்துள்ளதும் ரசிக்கும் படியாக உள்ளது. இதுவே விஜயின் இந்த திரைப்படம் மற்றைய விஜய் படங்களில் இருந்து வேறுபட்டு உள்ளது என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இதை விட கில்லி படத்தை ஞாபகப்படுத்தும் கபடி காட்சி, இடைவேளைக்கு பிறகு வரும் சண்டைக் காட்சிகள் என்பவற்றில் விஐய் தனது வழமையான படங்களில் உள்ளதை போல் மாஸ் காட்டி இருந்தார். அதாவது இந்த திரைப்படத்தில் விஐயின் கதை இரண்டு கோணங்களில் உள்ளது. முதலாவது தாடி, மீசை உடன் பக்கா லோக்கலாக சரக்கடிச்சுத் திரியும் ஓர் வித்தியாசமான கதாபாத்திரம். மற்றயது தனது குடிப்பழக்கத்தை விட்டெறிந்து பவானியிடம் இருந்து பள்ளியை மீட்டெடுக்க முயலும் வழமையான விஐயின் மாஸ் கதாபாத்திரம். இவ் இரண்டு வித்தியாசமான கோணத்தையும் விஐயின் தோற்றத்தை கொண்டே வேறு படுத்தலாம். முதலில் அதிக தாடி மீசையுடன் தோற்றம். பின்னர் தாடி, மீசையின் அளவை குறைத்து டீசன்ஸ் ஆன உடை என்று வழமையான விஜயின் கதாபாத்திரம் .
Comments
Post a Comment