" Yennai Maatrum Kadhale " You Tube Web Series Analysis and Review in Tamil

Yennai Maatrum Kadhale

Channel : Actually 

Genre : Comedy,  Romance 

Number of Episodes: 05

" Yennai Maatrum Kadhale " எனும் tamil web series ஆனது Actually எனும் You tube Channel இல் வெளிவந்துள்ளது. இந்த web series ஆனது ராஜ் எனும் கதாபாத்திரம் தனது நண்பன் மதனுக்காக உணவகம் ஒன்றில் காத்திருக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது. பொதுவாக ஒரு இடத்திற்கு போகும் போது ஆண் நண்பர்கள் சரியான நேரத்திற்கு வருவது மிகவும் அரிதான ஓர் விடயம் ஆகும். ராஜ் உம் மதனுக்காக காத்திரிருந்து ஒரு நிலைையில் பொறுமை இழந்து உணவகத்தில் இருந்து வெளியேற தனது ஆசனத்தில் இருந்து எழ ஒரு அழகான பெண் ஒருத்தி  உணவகத்தின் வாசலில் வருவதை அவதானிக்கிறான்.

அழகான பெண்ணைக்  கண்டால் நம்ம பசங்கள் என்ன செய்வாங்களோ அதை தான் ராஜ் உம் செய்கிறான். இன்னும் கொஞ்ச நேரம் நண்பனுக்காக காத்திருப்போம் என்று ராஜ்  ஆசனத்தில் அமர ;அந்த பெண் இவரின் மேசைக்கு வந்து ராஜ் இற்கு முன்னால் அமர்ந்து தனது பெயர் கீர்த்தனா என்று அறிமுகம் செய்கிறாள். ராஜ் பொதுவாகவே பெண்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுபவர். அதுவும் தீடீரென அழகான பெண் ஒருத்தி தன் முன் வந்து பேசும் போது ரொம்ப பதற்றத்துடன் நடந்தது கொண்டார். 
சிறிது நேரத்திற்குப் பின் கீர்த்தனா இற்கு அவளது தந்தையுடன் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன் பின் தான் கீர்த்தனா தனது தந்தை சந்திக்க சொன்ன மாப்பிள்ளை வேறு உணவகத்தில் உள்ளதாகவும் அந்த மாப்பிள்ளை ராஜ் இல்லை என்றும் அறிகிறாள். 

இதற்குப் பின் கீர்த்தனாவிற்கும் ராஜ்ஜிற்கும் இடையில் என்ன நடந்தது, கீர்த்தனாவிற்கும் புது மாப்பிள்ளைக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக நகைச்சுவை கலந்த பாணியில் 05 பாகங்களில் தந்துள்ளனர். உண்மையில் மிகவும் அற்புதமான தொடர் ஆகும். உணவகக் காட்சி, நண்பன் ராஜ் இற்கு அறிவுரை சொல்லும் காட்சி,  prank காட்சி என்று எண்ணற்ற ரசிக்கத்தக்க காட்சிகள் உள்ளன. ராஜ் இன் நண்பன் மதனின் காட்சிகள் மற்றும் ராஜ் கீர்த்தனா உடன் பேச கூச்சப் படும் காட்சிகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. 

பிண்ணனி இசையும் ரசிக்கத் தக்கதாக உள்ளது . நடிகர்களும் ஓரளவு சிறந்த performance ஐ வழங்கியுள்ளனர். எனினும் இன்னும் கொஞ்சம் கதையை பெருப்பித்திருக்கலாம் என்ற ஓர் எண்ணம் எமது மனதில் ஏற்படுகிறது. மேலும் romantic காட்சிகளும் குறைவாக காணப்படுகின்றது. காரணம் இந்த தொடரில் நகைச்சுவைக் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியதால் ஆகும். இது ஒரு வகையில் தொடரின் plus point என்றும் கூறலாம். நகைச்சுவை பிரியர்கள் இந்த தொடரை நிச்சயம் விரும்புவார்கள் என்பதில் எவ்வித ஐயமில்லை. 

எமது சமூகத்தில் நடைபெறக் கூடிய ஒரு கதையை நீங்கள் நகைச்சுவை கலந்த பாணியில் ரசிக்க விரும்பினால் கட்டாயம் " Yennai Maatrum Kadhale " தொடரை You Tube இல் பார்த்து மகிழுங்கள். 

Yennai Maatrum Kadhale Teaser 
👇👇👇



Comments

Popular posts from this blog

Monster Hunter ( 2020 ) movie Review and Ranking of all the six dangerous monsters from the movie from best to worst

Raya and the Last Dragon movie Analysis and Review

The Witch part 01 : The Subversion Analysis and Review

Freaky (2020) movie analysis & Ranking the top kills from the movie

Silenced Movie Analysis and Review

Is Wrong Turn : The Foundation ( 2021 ) Reboot is better than Wrong Turn ( 2003 ) original film or not ?

Supernatural Season 15 finale " Carry On " : 5 things fans are happy about Series Finale & 5 things they don't. | 5 ways Supernatural has given the perfect ending & 5 ways it don't

Is really the heist team is struck in an Infinity time loop in Zack Synder's Army of Dead ?

Whether Leah is a suitable pair for Daryl or not in The Walking Dead ?

மாஸ்டர் திரைப்படமும் இது வரை பார்க்காத தளபதி விஜய் இன் வித்தியாசமான கதாபாத்திரமும் : மாஸ்டர் திரைப்படம் பற்றிய ஓர் அலசல்