Godzilla vs Kong வெல்லப் போவது யார்? பற்றிய ஓர் ஆய்வு

Godzilla vs Kong திரைப்படம் ஆனது 2021 ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஆக மாறியுள்ளது. இரண்டு fan favourite monsters ஒன்றுடன் ஒன்று சண்டையிடப் போகின்றன. இதில் வெல்லப் போவது தான் King of monsters எனும் பட்டத்தை பெறப்போகின்றது. பொதுவாக hollywood திரைப்படங்களில் vs எனும் தலைப்புடன் வெளிவரும் திரைப்படங்கள் ஓர் பலத்த எதிர்பார்ப்புடன் தான் வெளிவரும். இந்தியாவில் விஜய் அஜித் ரசிகர்கள் ஒருவருடன் ஒருவர் சமூக வலைத்தளங்களில் முட்டி மோதிக் கொள்வது போல Hollywood ரசிகர்களும் மோத ஆரம்பித்து விடுவார்கள். 

கடந்த தசாப்பத்தில் வெளிவந்த Batman vs Superman , Captain America Civil War , Aliens vs Predator போன்ற திரைப்படங்கள் பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தன. ஆனால் சில படங்களில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். சில திரைபடங்களில் இரு பிரபலமான கதாபாத்திரங்கள் ஒருவருடன் ஒருவர் மோதி விட்டு இறுதியில் ஒரு பொது,  சக்தி வாய்ந்த எதிரியுடன் மோத ஒன்று சேர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு இடையிலான சண்டை வெற்றி தோல்வி இன்றி முடிவடையும்.  உதாரணமாக Batman vs Superman திரைப்படத்தை கூறலாம். இந்த திரைப்பட " Save Martha " காட்சி பரவலாக இன்று வரை troll பண்ணப்பட்டு வருவது நாம் அறிந்த விடயமே ஆகும். இதே trend இல் " Save Mothra " என்று Godzilla vs Kong திரைப்படம் பற்றியும் ரசிகர்கள் post போட ஆரம்பித்து விட்டார்கள்.  அந்த அளவுக்கு Batman vs Superman மிகப்பெரிய ஏமாற்றம் தந்த திரைப்படம் ஆகும்.


ஆனால் Godzilla vs Kong திரைப்படம் இது போன்ற தவறை செய்யாது என எதிர் பார்க்கப்படுகிற அதேவேளை சிலவேளை Godzilla & Kong ஆனவை Mega Godzilla உடன் சண்டை செய்ய ஒன்று சேரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. நாம இந்த article இல் ஒருவேளை இந்த திரைப்படத்தில் ஒரு winner ஐ தருவார்கள்  எனில் யார் இந்த சண்டையில் வெல்லப் போவதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது என்பது பற்றி பார்க்கப் போகிறோம்.

01. சக்தியின் அடிப்படையில் 

முதலாவதாக நாம் சக்தியின் அடிப்படையில் யார் வெல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என ஆராய்வோம் . நம் அனைவருக்கும் தெரியும் Godzilla இடம் nuclear radiation ஆல் சக்திவாய்ந்த கதிர்களை வாயால் கக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது என்று. இதன் உதவியுடன் தான் Godzilla கடந்த இரண்டு திரைப்படங்களில் வெற்றி பெற்றது. இது Godzilla இன் மிகப்பெரிய பலமாகும். ஆனால் Godzilla இது வரை மோதிய Monsters இடம் Kong போல ஒர் உடற்கட்டமைப்பு இல்லை. Kong இடம் காணப்படும் மனிதன் போன்ற உடற்கட்டமைப்பு மற்றும் கால்களால் வேகமாக நகரும் ஆற்றல் என்பன Godzilla இன் தாக்குதலில் இருந்து தப்பி எதிர் தாக்குதல் வழங்கக் கூடிய சந்தர்பத்தை வழங்குகின்றது. முதலாவது teaser இல் கூட Kong ஆனது Godzilla இற்கு Superman punch வழங்கும் காட்சியை கொண்டுள்ளது. Kong இது போல பலமான ஒரு தாக்குதல் நடத்தினால் வெற்றி பெறும். ஆனால் Godzilla ஒரு சரியான முறையில் Energy beams தாக்குதலால் இலகுவாக வெற்றி பெறும். 

அதேவேளை நாம் முந்தைய திரைப்படங்களில் அவதானித்துள்ளோம் Godzilla ஆனது தாக்குதலை நடத்த முன் தன் முதுகுப்புறத்தில் உள்ள கட்டமைப்பில் இருந்து சக்தியை திரட்டும். இந்த சக்தி திரட்ட  கொஞ்ச நேரம் அதற்கு தேவைப்படும். இந்த நேரம் தான் Kong இற்கு மிகப்பெரிய வாய்ப்பு. நகரும் வேகம் Kong இடம் Godzilla ஐ விட பல மடங்கு அதிகம் உள்ளதால் இந்த recharge நேரத்தில் Kong எதிர்பார்க்காத பல தாக்குதலை வழங்க முடியும். மேலும் Kong இடம் காணப்படும்  கைகள் fist , punch வழங்க உதவுவதுடன் பலமான பொருட்களை தூக்கி வீசவும் உதவும். சக்தியின் அடிப்படையில் பார்த்தால் யார் ஓர் பொருத்தமான சந்தர்பத்தை பெறுகின்றார்களோ அவர்களே வெற்றி பெறுவர் என்று கூறலாம்.


02. புத்திசாலித்தனத்தின் அடிப்படையில்
 

நாம் முந்தைய திரைப்படங்களில்  monsters படிப்படியாக புத்திசாலித்தனத்தை விருத்தி செய்வதை அறிந்துள்ளோம். அதன் அடிப்படையில் Godzilla தனது இரண்டு பெரிய சண்டை அனுபவத்தில் இருந்து தனது சண்டையிடும் யுத்திகளை விருத்தி செய்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மறுபுறத்தில் Kong ஆனது பிறந்ததில் இருந்தே புத்திசாலித்தனமாக காணப்படுகிறது.  Kong ஆனது சந்தர்ப்பத்திற்கேற்ப புத்திசாலித்தனமாக தன்னை மாற்றியமைத்து சண்டையிட்டக் கூடியது.

உதாரணமாக Kong Skull island திரைப்பட propeller காட்சியைக் கூறலாம். இதேபோல் Godzilla vs Kong திரைப்பட இன்னொரு teaser இல் Godzilla சக்தியை Kong மீது பிரயோகிக்க Kong ஆனது கோடரி போன்ற ஓர் பெரிய ஆயுதத்துடன் Godzilla மீது பாய்வது போல காட்சி உள்ளது. இது போல் Kong ஆனது சண்டையிடும் போது தனக்கு கிடைக்கும் பொருட்களை தனது புத்திசாலித்தனத்தால் ஆயுதமாக மாற்றும் என்பது நிச்சயம். மேலும் தனது புத்திசாலித்தனத்தால் Godzilla  இன் பலவீனங்களை ஆராய்ந்து அதை தோற்கடிக்க ஓர் வழியையும் கண்டு பிடிக்கலாம். புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் Kong ஆனது Godzilla ஐ வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 


03. மனிதர்களின் உதவி

Godzilla மற்றும் Kong ஆகிய இரண்டும் முன்னைய திரைப்படங்களில் இடம் பெறும் யுத்தங்களில் மனிதர்களின் உதவியுடனேயே வெற்றி பெற்றன. அதே போல் இந்த திரைப்படத்திலும் மனிதர்களின் செல்வாக்கு வெற்றியை தீர்மானிப்பதில் நிச்சயம் பங்க  வகிக்கும். உண்மையில் இந்த இரண்டு monsters உம் மனிதர்களை பல சந்தர்பங்களில் காப்பாற்றி உள்ளன. அதிலும் Godzilla குறிப்பாக இரண்டு சந்தர்ப்பங்களில் மனிதர்களை வேறு கொடிய monsters இன் தாக்குதலால் ஏற்பட்ட அழிவில் இருந்து காப்பாற்றி உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்துள்ளனர். ஓர் கொடிய titan அவர்களை தாக்க வரும் ஆயின் Godzilla நிச்சயம் தம்மை காக்க வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் தற்போது காணப்படுகிறது. 

மறுபுறம் Kong ஆனது Skull Island இல் ஆதிவாசி குடிகளை கொடிய பல்லிகளிடம் இருந்து பாதுகாத்ததுடன் அங்கு சென்ற மனிதர்கள் மற்றும் இராணுவ வீரர்களையும் பாதுகாத்து, அவர்கள் அந்த தீவில் இருந்து தப்பிக்கவும் உதவியது. ஆனால் இந்த விடயம் குறிப்பிட்ட ஒரு தொகுதி நபர்களுக்கும் அரசாங்கத்திற்கும் மாத்திரம் தான் தெரியும். அதைவிட இந்த விடயம் நடந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இச் சண்டையில் அனேகமாக மனிதர்களின் ஆதரவு Godzilla பக்கமே காணப்படலாம். மேலும் poster இல் Kong ஆனது அழிவடைந்த இராணுவ முகமின் நடுவில் நிற்பதாக உள்ளது. எனவே நிச்சயம் இராணுவ தாக்குதல் Kong மீது நடைபெற வாய்ப்பு உள்ளது.  மேலும் " Godzilla will come for him " எனும் teaser வாசகமும் சிலவேளை மனிதர்களின் உதவி Godzilla இற்கு காணப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. எனவே மனிதர்களின் உதவியின் அடிப்படையில் Godzilla வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. 


எமது எதிர்பார்ப்பு

இரண்டு titans உம் மக்கள் மத்தியில் பிரபலமானவை. மேலும் இரண்டும் நல்ல titans ஆகவே இது வரை திரைப்படங்களில் காட்டப்படுகின்றன. எனவே எது வெற்றி பெறும் என்ற கருத்தும் மக்களிடேயே பரவலாகவே உள்ளது. சிலர் Kong என்கிறார்கள் சிலர் Godzilla  என்கிறார்கள் மேலும் சிலர் இரண்டும் இறுதியில் ஒன்று சேர்ந்து ஓர் பொது எதிரியுடன் சண்டையிடும் என்கிறார்கள். உண்மையில் சொன்னால் இவ் விரண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு Godzilla இற்கு 50 % மற்றும் Kong இற்கும் 50% என்று சமமாகவே காணப்படுகிறது. 

இதைவிட இந்த சண்டையின் இறுதியில் யார் King of Monsters என்பதற்கான விடையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் Godzilla உம் Kong உம் மோதிக் கொள்வது இது முதல் தடவை அல்ல ஆதி காலம் முதலேயே இவை யார் King of monsters என domination பெற மோதிக் கொள்கின்றன. இதை முன்னைய திரைப்பட ஆதிவாசிகளின் குகை ஓவிய காட்சியில் இருந்து அறியலாம். மேலும் இத் திரைப்படம் 1961 வந்த திரைப்படத்தின் reboot   என்று கருதப்படுகிறது. அந்த திரைப்படத்தில் இந்த இரு titans இற்கிடையிலான சண்டை draw ஆகவே முடிந்துள்ளது. இதை விட இந்த vs வகை திரைபடங்கள் பெரும்பாலனவைையில் title இல் முதலில் இடம் பெறும் கதாபாத்திரத்தின் ஆதிக்கமே திரைப்படத்தில் காணப்படும். இத் திரைப்படத்திலும் சிலவேளை இக் கருத்து உண்மையாக இருக்கலாம். 

நாம என்னத்தை கூறினாலும் யார் வெல்லப் போவது என்பதை தீர்மானிப்பது திரைப்பட கதாசிரியர் தான். ஆனால் எமது எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்வார்களா இல்லையா என்பதை March 26 ஆம் திகதி அறியலாம். 


இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல்  comment section இல் பதிவிடுங்கள். மேலும் வெல்லப் போவது Godzilla ஆ Kong  ஆ என்று உங்கள் கருத்துக்களை பதிவிடுக. இந்த ஆக்கத்தையும் மறக்காமல் share செய்க.

Article by : N.Vithushan 

Vaathi Coming: Godzilla vs Kong version 

👇👇👇



Comments

Popular posts from this blog

Monster Hunter ( 2020 ) movie Review and Ranking of all the six dangerous monsters from the movie from best to worst

Raya and the Last Dragon movie Analysis and Review

The Witch part 01 : The Subversion Analysis and Review

Freaky (2020) movie analysis & Ranking the top kills from the movie

Silenced Movie Analysis and Review

Is Wrong Turn : The Foundation ( 2021 ) Reboot is better than Wrong Turn ( 2003 ) original film or not ?

Supernatural Season 15 finale " Carry On " : 5 things fans are happy about Series Finale & 5 things they don't. | 5 ways Supernatural has given the perfect ending & 5 ways it don't

Is really the heist team is struck in an Infinity time loop in Zack Synder's Army of Dead ?

Whether Leah is a suitable pair for Daryl or not in The Walking Dead ?

மாஸ்டர் திரைப்படமும் இது வரை பார்க்காத தளபதி விஜய் இன் வித்தியாசமான கதாபாத்திரமும் : மாஸ்டர் திரைப்படம் பற்றிய ஓர் அலசல்