களத்தில் சந்திப்போம் திரைப்படம் பற்றிய ஓர் அலசலும் இத் திரைப்படம் நண்பர்களுக்குச் சொல்லும் முக்கிய செய்தியும்
களத்தில் சந்திப்போம்
திரைப்பட வகை : நகைச்சுவை
ஜீவா, அருள்நிதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ஓர் கலக்கலான நகைச்சுவைத் திரைப்படம் களத்தில் சந்திப்போம் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் உண்மையான நண்பர்களுக்கிடையிலான நட்பு, பாசம் எப்படிப் பட்டது என்பதைக் காட்டுகிறது. என்னதான் தமக்கிடையே அடி பட்டாலும் நண்பனுக்கு ஒரு பிரச்சனை எண்டால் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை இந்த திரைப்படத்தில் மிகவும் அழகாக காட்டியுள்ளார்கள்.
கபடி , காதல் , சண்டை , நட்பு என்று அனைத்தும் ரசிக்கும் படியாக இத் திரைப்படத்தில் உள்ளது. அசோக், ஆனந் எனும் இரு கதாபாத்திரங்களும் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. இவர்களை விட காவியா , சோபியா எனும் இரு கதாநாயகிகளின் கதை ரசிக்கும் படியாக உள்ளது. இவர்களை விட இன்னும் பல பிரபல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் ரசிக்கும் படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ரதா ரவி, ரோபோ சங்கர், பாலா சரவணன் போன்றோர் தேவையான இடங்களில் கலக்கி உள்ளனர். நண்பர்கள் பற்றிய பாட்டு மிகவும் அற்புதம். இதைவிட சண்டைக் காட்சிகளில் பின்னணி இசை மிரட்டுகிறது.
கபடி காட்சிகள் மிகவும் அட்டகாசமாக உள்ளது. இதை விட காவியா ட கதை ரொம்ப வித்தியாசமாக உள்ளது. இருந்தாலும் ரசிகர்களால் இதுக்கு அப்புறம் இப்படி தான் நடக்கும் என்று ஓரளவு கணிக்க கூடயதாகவும் உள்ளது. தமிழ் சினிமாவின் ஓர் வழக்கமான கதையை கொஞ்சம் வித்தியாசமான முறையில் நகைச்சுவை ஆகத் தந்துள்ளார்கள்.
இதைவிட நண்பர்கள் ஒருவரை ஒருவர் பற்றி விளையாட்டாகக் கதைப்பது ஓர் வழக்கமான விடயமாகும். நண்பர்களுக்கிடையில் இது வெறும் நகைச்சுவைக் கதை என்று தெரியும். ஆனால் இது மற்ற சமூகத்திற்கு தெரியாது. இந்த விளையாட்டுக் கதை சிலவேளை பல பிரச்சினைகளைக் கூட கொண்டு வரலாம். இதை அசோக் ஆனவர் ஆனந் பற்றி விளையாட்டாக சொன்ன கதை எவ்வளவு பிரச்சனையை கொண்டு வந்த விதம் மூலம் காட்டியுள்ளார்கள் இத் திரைப்படத்தில்.
இத் திரைப்படம் கூறும் முக்கிய செய்தி " நாம் நண்பர்களுடன் விளையாட்டாகக் கதைக்கும் விடயங்களை வேறு நபர்களுடன் பகிர்வதை தவிர்க்க வேண்டும். மேலும் நமது நண்பர்களுடனும் இவ்வாறான கதைகளை பொதுவெளியில் வேறு நபர்கள் உள்ள போது தவிர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் குதூகலமாக ஓர் திரைப்படம் பார்க்க விரும்பினால் நிச்சயமாக இந்தத் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்.
Comments
Post a Comment