உலகப் புகழ்பெற்ற Attack on Titan எனும் Anime தொடர் பற்றிய ஒர் அறிமுகம் தமிழில்
Attack On Titan ( World Best Anime )
Genre : Action, Scifi
![]() |
சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத ஒரு தொடரை நீங்கள் தேடுகின்றீர்களா? நீங்கள் நிச்சயம் இந்த Anime ஐப் பார்க்கலாம். ஒவ்வொரு Episode இலும் சுவாரசியமும் விறுவிறுப்பும் உள்ளவாறு மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகள் மரண மாஸ். இதைவிட பிண்ணனி இசை மண்டைக்க ஒரு மாதிரி 2 அல்லது 3 நாட்களுக்கு ஓடிக் கொண்டிருக்கும். அந்தளவுக்கு அருமையா இருக்கும். இதைவிட கதை அமைப்பு பல வித திருப்பங்களையும் ரகசியங்களையும் கொண்டது. ஒவ்வொரு Episode உம் சீட்டின் நுனிக்கு எங்களைக் கொண்டு வந்து விடும்.
![]() |
மனிதர்களை ஒருநாள் திடீரென Titans எனும் மனிதர்களை வேட்டையாடி உண்ணும் உயிரினங்களால் தாக்கப்படுகின்றனர். பாதுகாப்பிற்காக ஓர் பிரமாண்டமான சுவருக்கு பின்னால் வாழ ஆரம்பிக்கின்றனர். 3 கட்டமாக இருக்கும் இந்த சுவரில் மனிதர்கள் வாழ்கின்றனர்.பல நூற்றாண்டுகளாக இவை மனிதர்களுக்கு பாதுகாப்பை வழங்கின. எனினும் ஒருநாள் திடீரென ஓர் பிரமாண்டமான Colossal Titan உம் பலமும் வேகமான Armour Titan உம் Wall Rose ஐ தாக்கிய போது இந் நிலை மாறியது.
Armour Titan சுவரின் நுழைவாயிலை உடைக்க மற்றைய சிறிய Titans உம் அந்த ஊரிற்குள் புகுந்து மக்களை உண்ணத் தொடங்கினர். Scouts எனப்படும் வீரர்கள் தம்மால் முடிந்தளவு Titans ஐ தடுக்க முயன்றனர். எனினும் அவர்களால் Armour மற்றும் Colossal ஐ தடுக்க முடியவில்லை. பலவித உயிரிழப்புகளின் மத்தியில் எஞ்சியவர்கள் மீதி 2 சுவர்களின் பின்னால் தஞ்சம் புகுந்தனர். Armour & Colossal Titans உம் தாக்குதலுக்கு பின்னர் திடீரென மறைந்தன.
![]() |
Titans ஐ எதிர்கொள்ள Scouts பிரிவினை விரிவு படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. புதிதாக நபர்களை இணைத்து அவர்களுக்கு கடின பயிற்சியை பல வருடங்களாக வழங்கி ஓர் பலமான Army ஐ உருவாக்கினர். இன்னொரு முறை Colossal & Armour Titan தோன்றினால் அவர்களை வேட்டையாடக் கூடிய திறன் மிக்கவர்களாக இந்த படை மாறியது. Scouts இழந்த தமது பழைய சுவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். இவர்களுள் முக்கிய கதாபாத்திரங்களான Eren , Mikasa மற்றும் Armin உம் உள்ளடங்குவர்.
![]() |
இவர்கள் Titans தாக்குதலால் பாதிக்கப்பட கிராமத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்கள். இவர்களுள் Eren இன் தாய் அவன் கண் முன் Titans ஆல் உண்ணப்படுகிறாள். அன்றிலிருந்து Eren எல்லா Titans ஐயும் தான் கொல்லும் வரை ஓய மாட்டேன் என்ற வெறியோடு அலைகின்றான். Scouts உடன் Titans ஐ கொன்று சுவரை மீட்க முயலும் போது Eren ஆனவன் Armin ஐ Titan இடம் இருந்து காப்பாற்றி தான் அதனிடம் அகப்பட்டு அவன் இறக்கும் நிலையை அடைய, திடீரென Eren இற்கு Titan ஆக உருமாறும் சக்தி கிடைத்து. இதன் பின்னர் தொடர் வேற லெவல்.
![]() |
Eren இற்கு எவ்வாறு இந்த சக்தி கிடைத்து, Colossal & Armour Titans இன் ரகசியம், இந்த இரண்டு Titans உம் ஏன் சுவரைத் தாக்கினர், இந்த பிரமாண்டமான சுவர்கள் எவ்வாறு உருவாக்கப் பட்டன என இன்னும் பல சுவாரசியமான விடயங்களை உள்ளடக்கியதாக கதை நகர்கிறது. இந்த ரகசியங்களையும், Eren மற்றும் Mikasa மற்றும் Armin ஆகியோருக்கு என்ன நடந்தது, Curse of Ymir , Eren தனது சக்தியை எவ்வாறு பயன்படுத்தினான், Eren போல Titan Shifters வேறு யாராவது உள்ளார்களா , Eren ஆனவன் Titan ஆக மாறியதைப் பார்த்து மற்றவர்கள் எப்படி நடந்து கொண்டனர் போன்று இன்னும் பல விடயங்களை தொடரைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
![]() |
இந்த தொடரில் Eren , Mikasa, Armin , Captain Levi , Sasha , Jean , Connie , Historia , Commander Erwin , Kenji போன்ற பல சுவாரசியமான கதாபாத்திரங்களும் Female Titan , Armour Titan, Colossal Titan , Gabi , Beast Titan போன்ற மிரட்டலான எதிர்மறை கதாபாத்திரங்களும் ( வில்லன் பாத்திரங்கள் ) உள்ளனர். இந்த தொடரானது இறப்புகளும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் நிறைந்தாக உள்ளது. எமக்கு பிடித்த கதாபாத்திரங்கள் இந்த நொடியிலும் மரணிக்கக் கூடும். எனவே ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்துடன் இப்படியாவது நமக்கு பிடித்த பாத்திரம் உயிர் பிழைக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். இதுவே இந்த தொடர் பிரபலமானத்திற்கு மிகப் பெரிய காரணம் ஆகும்.
Action scenes மிகவும் அசத்தலாக இருக்கும். Season 01 இல் Female Titan இன் காட்சிகள், Season 02 இல் Armour & Colossal Titans இன் காட்சிகள், Season 03 இல் Beast Titan காட்சிகள், Season 04 இல் நகரச் சண்டைக் காட்சிகள் என வெறித்தனமான காட்சிகள் ஓவ்வொரு Season இலும் இருக்கின்றன. ஓர் அற்புதமான தொடரை பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இந்த தொடரைப் பார்த்து மகிழுங்கள்.
Follow this Facebook page for more articles and updates about new movies and t.v series >>>
Comments
Post a Comment